பயனர் உருவாக்கம் மற்றும் பயன்பாடு தொடர்பான விளக்கம்

இத்தளத்தில் நீங்கள் ஒரு பயனராக, உங்களைப் பதிவு செய்துகொள்வதன் மூலம், புதிய மாவீரர் விவரங்களைச் சேர்க்க (எமக்கு அனுப்ப) முடியும்.

அத்துடன், பயனராக உள் நுழைந்த ஒருவர், ஏற்கனவே உள்ள விவரங்களில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் இருப்பின், அவற்றை 'திருத்தக் கோரிக்கை' வழியாக எமக்குத் தெரியப்படுத்தலாம்.

பயனர் கணக்கை உருவாக்குதல்:

பயனராகப் பதிவு செய்து கொள்வதற்கு, முதன்மைப் பட்டியில் உள்ள 'பதிவு செய்' என்பதைத் தெரிவு செய்து, அங்கு தோன்றும் படிவத்தை நிரப்புதல் வேண்டும். இதன்போது உங்களது பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் மறக்காதிருப்பதற்கு, அவைகளைக் குறித்துக் கொள்ளவும்.

பயனர் உருவாக்கத்துக்காக விண்ணப்பித்த ஒவ்வொருவரதும் விவரம் சரிபார்க்கப்பட்டு, மூன்று நாட்களினுள் பயனராக உள்வாங்கப்படும் அதேவேளை, பதில் அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், "உள் நுழை" என்பதைத் தெரிவு செய்து, உங்களது பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உட்புகுத்தி, உள் நுழைவை மேற்கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: பயனராகப் பதிவு செய்வோரின் விவரங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.

புதிய விவரங்களைச் சேர்த்தல்:

புதிதாக ஒரு மாவீரர் விவரத்தை இணைப்பதற்கு முன்னர், அந்த விவரம் இத்தளத்தில் ஏற்கனவே உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இதற்குத் தளத்திலுள்ள "தேடற் பகுதி" யைத் தெரிவு செய்து, குறிப்பிட்ட மாவீரரின் பெயர் அல்லது தேடற் பகுதியில் உள்ள ஏனைய விவரங்களை உள்ளீடு செய்து தேடிப் பார்க்கலாம்.

அவ்வாறு தேடும்போது, குறித்த மாவீரரின் விவரம் ஏற்கனவே தளத்தில் இருந்தால், மீண்டும் புதிதாகச் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

அம்மாவீரர் தொடர்பான இதுவரை சேர்க்கப்படாத தரவுகள், புகைப்படங்கள் அல்லது வரலாற்றுக் குறிப்புகள் உங்களிடம் இருப்பின், குறித்த மாவீரரின் விவரங்களின் மேற் பகுதியில் காண்பிக்கப்படும் "திருத்தக் கோரிக்கை" என்பதைத் தெரிவு செய்து, அதன் வழியாக உள்ளீடு செய்யலாம்.

«வீரவேங்கை மாவீரர்» என்கின்ற அடையாளப்படுத்தல் குறித்த விளக்கம்:

இத்தளத்தில் இறுதிப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் «வீரவேங்கை மாவீரர்» என்ற அடையாளப்படுத்தலுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னர் (18.05.2009), மாவீரர் விவரங்களை உறுதிப்படுத்திப் படைத்துறைத் தரநிலைகளை (Ranks) அறிவிப்பதற்கான தலைமைப் பீடமோ அல்லது அதிகாரபூர்வ படைத்துறைக் கட்டமைப்போ இல்லாத சூழ்நிலையில், படைத்துறைத் தரநிலைகளை வழங்குவது, தேவையற்ற குழப்பங்களுக்கும் நிர்வாகச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கலாம்.

எனவே, இறுதிப் போர்க்கால மாவீரர்களுக்குத் தற்போதைய நிலையில் படைத்துறைத் தரநிலைகளை வழங்குவதில்லை என்றும், அவர்களை «வீரவேங்கை மாவீரர்» என மதிப்பளிப்பது என்றும் முன்னாள் போராளிகளும் புலம்பெயர் தேசங்களிலுள்ள செயற்பாட்டாளர்களும் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே இத்தளத்திலும் அவர்கள் "வீரவேங்கை மாவீரர்" என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.