அறிமுகம்

About Maaveeram

தமிழீழ மக்களினதும் மண்ணினதும் விடுதலைக்காகத் தம்மை ஆகுதியாக்கிய வீரமறவர்களின் தரவுகள், சாதனைகள் மற்றும் தியாகங்களை ஆதாரங்களின் அடிப்படையில் சரியாகவும் நேர்த்தியாகவும் முழுமைப்படுத்தி, ஒரே தளத்தில் பாதுகாப்பான முறையில் ஆவணப்படுத்துவதே "மாவீரம்" maaveeram.info தகவல் தளத்தின் முதன்மை நோக்கமாகும்.

அனைவரும் எளிதாகப் பார்க்கும் வகையிலும் தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் இத்தளம் வடிவமைக்கப்பெற்றுள்ளது.

இது தமிழினத்தின் வரலாற்றுச் சொத்தாகவும் எமது எதிர்காலத் தலைமுறையினருக்கான வழிகாட்டியாகவும் அமைகிறது.

விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலங்களில் அறிவிக்கப்பெற்ற மாவீரர்களின் விவரங்கள் பல்வேறு வழிகளிலும் சேகரிக்கப்பட்டு இலத்திரனியல் மயமாக்கப்பெறுகின்றன.

அதேவேளை, முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை, களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் விவரங்களையும் "தமிழீழ மாவீரர் பணிமனை" ஊடாக உறுதிப்படுத்தி இணைத்து வருகிறோம்.

இந்த ஆவணத் தொகுப்பிலுள்ள தகவல்கள் அனைத்தும் விடுதலைப் போராட்டத்தில் பயணித்த தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் மாவீரர்களின் குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆவணமாக்கப்படுகின்றன.

இவ்விவரங்களில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் இருப்பின், அவற்றை எமக்குத் தெரியப்படுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இந்த ஆவணத் தொகுப்பில் இதுவரை சேர்க்கப்படாத மாவீரர்கள், மாமனிதர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் விவரங்களைச் சேர்க்கும் பணியில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

"நன்றி"
நிர்வாகம்,
"மாவீரம்" ஆவணக் காப்பகம்.