மாவீரர் விவரம்/ விவரங்களைப் பெறுதல்

கீழேயுள்ள தரவுகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைச் சேர்ப்பதனூடாக, தேடல் செய்யப்படலாம்.

பிறந்த வருடம் அல்லது நாள் மூலம் தேடலாம்.

வீரச்சாவடைந்த ஆண்டு அல்லது நாள் மூலம் தேடலாம்.

மொத்தம் 6 விபரங்கள்

லெப்ரினன்ட் சீலன்/ ஆசீர்

ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி

புனித மரியாள் வீதி, திருகோணமலை

11/12/1960 - 15/07/1983

யாழ். மாவட்டம் சாவகச்சேரியின் மீசாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் படுகாயமடைந்த நிலையில், அவரின் கட்டளையின் பேரில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் சங்கர்

செல்வச்சந்திரன் சத்தியநாதன்

கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

19/06/1961 - 27/11/1982

யாழ்ப்பாணம், நல்லூர்ப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் விழுப்புண்ணடைந்து தமிழகத்தில் மருத்துவம் பெறும்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

லெப்ரினன்ட் செல்லக்கிளி அம்மான்

சதாசிவம் செல்வநாயகம்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

15/06/1953 - 23/07/1983

யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் சுற்றுக்காவல் ஊர்தி அணி மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் லிங்கம்

சிங்காரவேல் செல்வகுமார்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

16/12/1960 - 29/04/1986

ரெலோ அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் விடுதலை தொடர்பாகப் பேசுவதற்கு தலைமைப் பீடத்தால் அனுப்பப்பட்டவேளை, யாழ். கல்வியங்காட்டில் அமைந்திருந்த ரெலோ அமைப்பின் தலைமையகத்தில் வைத்து ரெலோ அமைப்பினரால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் ரெஜி

சுப்பிரமணியம் மகேஸ்வரன்

ஆலடி, காரைநகர், யாழ்ப்பாணம்.

10/01/1955 - 02/12/1985

மணலாறு, பட்டிக்குடியிருப்புப் பகுதியில் சிறிலங்காப் படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை ஆனந்

இராமநாதன் அருள்நாதன்

மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்

25/01/1964 - 15/07/1983

யாழ் மாவட்டம் சாவகச்சேரியின் மீசாலைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முற்றுகையில் படுகாயமடைந்த நிலையில், அவரின் வேண்டுகோளின் பேரில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.